நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, ஹீமா குரேஷி ஆகியோர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் ஹீமா குரேஷி இப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். முன்னதாக ஹீமா குரேஷி, அஜித்துடன் வலிமை படத்தில் நடித்திருந்த நிலையில் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னையில் அஜித் படத்தில் இருந்து விலகியுள்ளார். இதனால் அஜித் சற்று அப்செட்டில் உள்ளாராம்.
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த படக்குழுவினர், தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல மார்க்கெட்டினை வைத்துள்ள ரெஜினா கசாண்ட்ராவை அஜித்துடன் நடிக்க வைக்க கேட்டுள்ளனர். இதனால் ஹேப்பியான ரெஜினா உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார்.







