தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அளவு, வானிலை நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கும் திறந்து விடப்பட்ட நீர் விவகாரம், பற்றாக்குறை நீர் விவகாரம் தொடர்பாகவும், காவிரி ஆணையத்தின் முந்தைய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்தும் விவாதம் செய்யப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு வினாடிக்கு 9000 கன அடி வீதம் நீர் திறக்க பரிந்துரைத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு தரப்பில் ஒரு நாளைக்கு 1.9 டி.எம்.சி நீர் திறப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். மேலும் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகம் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்தது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கன அடி நீர் என்ற அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தண்ணீர் தீறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு கர்நாடக நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.