’ஹெல்மெட் மேன் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படும் ராகவேந்திரா சிங் லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் இலவசமாக ஹெல்மெட் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
சாலை பாதுகாப்பு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஹெல்மெட் அணிந்து சென்றதால் பல உயிர்கள் காப்பாற்றபட்டுள்ளன. ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ராகவேந்திரா சிங் ஹெல்மெட் வாங்கி கொடுக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல நபர்களுக்கு இவர் ஹெல்மெட் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அண்மைச் செய்தி: பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
இவரது நண்பர் சாலை விபத்தில் நொய்டாவில் இறந்துவிட்டார். இதையடுத்து சாலை பாதுகாப்பு என்ற சேவையை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒருவரிடம் ஹெல்மெட்டை வழங்கியுள்ளார் ராகவேந்திரா சிங். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.







