முக்கியச் செய்திகள் குற்றம்

திருமணத்திற்கு முன் பிறந்த ஆண் சிசு; சாக்குப்பையில் கட்டி வைத்த பெண்

ஓமலூர் அருகே திருமணத்திற்கு முன் பிறந்த ஆண் சிசுவை, சாக்குப்பையில் கட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாத்தியம்பட்டியை சேர்ந்த பாக்கியம் என்பவரின் மகள், முறையற்ற உறவால் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண்ணிற்கு ஆண் சிசு பிறந்த நிலையில், பாக்கியம் சிசுவை சாக்கு மூட்டையில் கட்டி வைத்ததாகவும், பின்னர் மகளை, சிகிச்சைக்காக, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அதிகாரி ஜெகநாதன், போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆண் சிசு உயிரிழந்ததையடுத்து, பாக்கியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். பாக்கியத்தின் மகள் திருமணமாகத நிலையில், கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார். அதை மறைக்கவே, குழந்தையை சாக்குப்பையில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 33,658 பேருக்கு தொற்று உறுதி!

Halley Karthik

விநாயகர் சதுர்த்தி: சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Halley Karthik

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்; நொடிப் பொழுதில் காப்பாற்றிய காவலர்கள் – வீடியோ

Jayapriya