முக்கியச் செய்திகள் கொரோனா

ஒமிக்ரான் வைரஸ்; விமானநிலையங்களில் ஆய்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதியதாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மதுரை, திருச்சி மற்றும் கோவை விமானநிலையங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 கோடியே 40 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்தில், 469 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 95 சதவீதம் டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒமிக்ரான் தொடர்பான உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலை பின்பற்றி வருவதாகவும், நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தீவிரத்தன்மை கொண்டது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ராவுல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க சிஐஏ சதி !

எல்.ரேணுகாதேவி

முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்: சி.டி.ரவி

Niruban Chakkaaravarthi

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு

Gayathri Venkatesan