சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த பாதுஷா மொய்தீன் என்பவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாதுஷா மொய்தீனை மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
பின்னர் கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதுஷா மொய்தீனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதுஷா மொய்தீன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாதுஷா மொய்தீனை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







