முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் உதகையில் புலி

உதகையில் பிரபலமான சுற்றுலா பகுதியில், புலி உலா வருவதால், சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

டி-23 என்ற ஆண்‌ புலி ஒன்று முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் கடந்த மாதம் 12-ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி, அந்த புலியை, வனத்துறையினர் வெற்றிகரமாக உயிருடன் பிடித்தனர். இதனால், முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருத்த மக்கள் அச்சம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில்,

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பைக்காரா படகு இல்லம், மிகவும் பிரபலமான சுற்றுலா பகுதியாகும். மோட்டார் படகு மற்றும் அதிவேக படகில் பயணம் செய்து அணையை சுற்றி பார்ப்பதில், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடர்ந்த காட்டினை ஒட்டிய பைக்காரா அணை பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அணையின் ஓரம் அவ்வப்போது உலா வரும். இந்நிலையில், அணை பகுதியில் இருந்து தீடீரென வெளியேறிய புலி ஒன்று, நீராடியபடி, வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோவை சுற்றுலா பயணிகள், அச்சத்துடன் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

அலோபதி குறித்த பேச்சு; பாபா ராம்தேவ் வீடியோவை ஆய்வுசெய்யும் உச்சநீதிமன்றம்

Ezhilarasan

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; ராணுவ வீரர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி

Halley Karthik

சர்வதேச விமானங்கள் ரத்து!

Ezhilarasan