பாஜகவினரை கொரோனா நெருங்காது!

பாஜாகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்று வராது என்று குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் கூறியுள்ளார். அகமதாபாத்தில் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மற்றும் கிரிக்கெட் போட்டிகளால் மாநிலத்தில் கொரோன…

பாஜாகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்று வராது என்று குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் கூறியுள்ளார்.


அகமதாபாத்தில் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மற்றும் கிரிக்கெட் போட்டிகளால் மாநிலத்தில் கொரோன வேகமாகப் பரவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து நிரூபர்கள் குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேலிடம் “தேர்தல் பரப்புரையின் போது அரசியல்வாதிகளும் மக்களும் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று அதிகம் பரவுகிறதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “உழைப்பாளிகளுக்குக் கொரோனா பரவாது. பாஜகவினர் கடினமாக உழைக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கொரோனா பரவாது” என்றார்.

கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதேபோல் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்பன் பட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.