அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வோம் – சி.டி.ரவி

அதிமுக கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வதே நோக்கம் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக…

அதிமுக கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வதே நோக்கம் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கலந்து கொண்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகத்தில் பாஜக ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டதாக சி.டி.ரவி கூறினார்.

அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் கேட்டுபெறுவது என்பது பாஜகவின் முக்கிய நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வதே பாஜகவின் நோக்கம் எனத் தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் முடிவு தெரியவரும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.