காதல் தோல்வி; கல்லூரி மாணவர் உயிரிழப்பு

காதல் தோல்வியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ். இவர், அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.…

காதல் தோல்வியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ். இவர், அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவியை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ய அவரது வீட்டினர் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்த தகவலறிந்த ரிஷிகேஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.