சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய திருமணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த திருமலை என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அதில், காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த திருமலை என்பவர், ஆசை வார்த்தைக் கூறி தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகவும் இதன் மூலம், தான் ஆண் குழந்தைக்குத் தாயானதாக கூறியிருந்தார்.
ஆனால் தற்போது திருமலை தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை ஏமாற்றியை திருமலையை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.







