மகாராஷ்டிராவில் முகக்கவசமின்றி சுற்றுலாப் பயணிகள் உலா வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,026 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 179 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலாவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருப்பதுடன், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் உள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.







