தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன், நீர்வளத்துறை…

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சதீஷ் ஆகியோரும் உடன் இருந்தனர். இதனையடுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.