பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவன்

செல்போனில், வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கட்குமாரின் இரண்டாவது மகன் 15…

செல்போனில், வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கட்குமாரின் இரண்டாவது மகன் 15 வயதான சிறுவன், செல்போனில் எந்த நேரமும் ஃப்ரீ பையர் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டிலிருந்த 33 லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் நகைள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளான்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 24 மணிநேரத்தில், சென்னை தாம்பரத்தில் இருந்த சிறுவனை மீட்டுள்ளனர்.


விசாரணையில் சிறுவன், நேபாளத்திற்கு விமான டிக்கெட் புக் செய்திருந்ததும், வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற நகைகளை, அடகு வைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.