சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை…

கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை சேர்ந்த அப்துல் சமது (58). இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை செல்போனில் படம்பிடித்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முதியவரை போலீசார் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.