ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு; உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின்…

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின் செயலாளர் கார்த்திகேயன், தேர்வு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் 11 மாணவர்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடப்பு செமஸ்டர் தேர்வை நேரில் எதிர்கொள்வது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் ஆன்லைன் தேர்வு முறை வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 2 மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறினார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.