மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெக தொடர்ந்து முன்னிலை – மதியம் 12 மணி நிலவரம் என்ன?

மதியம் 12 மணி நிலவரப்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

12 மணி நிலவரம்:

மதுராந்தகம்

1.தவெக (மரகதம் குமரவேல்) – 30,841
2.திமுக (பரந்தாமன்)- 20,502
3.அதிமுக (கணிதா சம்பத்) – 17,687
4.நாதக (ஜானகிராமன்) – 925
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 766

மதுராந்தகத்தில் தவெக 10,339 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…

தாராபுரம்

1.தவெக (சத்தியபாமா) – 27,649
2.அதிமுக (பானுமதி) – 23,521
3.திமுக (சுகன்யா) – 22,503
4.நாதக (கார்த்திகா) – 2,156
5.சிபிஐ ( லட்சுமணன்) – 542

தாராபுரத்தில் தவெக 4,128 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.