தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளது.
இதனிடையே இதனிடையே தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில் தவெக, விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற சமுயுகநீதி வெற்றிக் கூட்டணி உறுவாக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தவெக கூட்டணி சார்பில் ஏற்கனவே அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுள்ளனர்.
இந்த நிலையில் நாளை வேட்பமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த இடைத் தேர்தலில் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த சிபிஐ மற்றும் சிபிஐஎம் ஆகிய இடதுசாரி கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்) ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. அதன்படி மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் சிபிஐ கட்சியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இடதுசாரி ந்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுராந்தகம் தொகுதியில் சிபிஐ(எம்) சார்பில் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ சார்பில் வேட்பாளராக லட்சுமணனும் போட்டியிட உள்ளதாக சிபிஐ, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், பெ.சண்முகம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.




