கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராமப்புற பகுதியில் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்.…

தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராமப்புற பகுதியில் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ
குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்
வீரம்மாள். இவர் வயிற்று வலி காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்த்த நிலையில் பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டறியப்பட்டது.,

இந்த பித்தப்பை கற்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவக்
குழுவினர் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை
படைத்தனர்.
சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இந் நிலையில் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறை கிராமப்புற பகுதியான உசிலம்பட்டியில் முதன்முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்றே நாளில் மருத்துவக்கழுவினர் பாதிக்கப்பட்டவரை நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.