நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் திருச்செந்தூர் செல்லும் சாலையில் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்போது
வள்ளியூரில் பரவலாக மழை பெய்ததால் மழைநீர் ரயில்வே பாலத்தில் தேங்கியது.
மேலும் மழைநீர் வடியாததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர்
மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாததால் மாற்று பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி தெற்கு வள்ளியூர் பாதையாக செல்கின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் தண்ணீருக்குள் வாகனங்களை செலுத்தி சென்று வருகின்றனர். ஆகவே தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ரெ.வீரம்மாதேவி







