விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி பயிர்கடன்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் 14 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.…

விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் 14 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர்,  2022 – 23 ஆம் ஆண்டில் இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12 ஆயிரத்து 648 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டு சராசரியை விட 89 சதவிகிதம் அதிகம் எனவும் அமைச்சர் பேசினார்.

வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதே போல் ஆடு,மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக்கடனாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் அளவில் வழங்கப்படும் எனவும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.