உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரித்தல் முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் சார்பாக…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரித்தல் முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர்.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் சார்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமினை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் நகர்மன்ற தலைவர் சகுந்தலா இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் கர்ப்பபை தொடர்பான பிரச்சினைகள், தொடர் கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மருத்துவமனையின் சார்பில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பத்தாயிரம் மதிப்பிலான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.இம்முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.