முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: முதல்வர்!

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில், 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இரண்டாவது நாளான இன்று மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மதுரை தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளில், முதல்கட்டமாக 250 படுக்கைகள் உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் மீதி உள்ள 250 படுக்கைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement:

Related posts

ராமநாதபுரம் அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்!

Saravana

டெல்டா வகை கொரோனா இளைஞர்களை அதிகம் தாக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை

Karthick

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்: எஸ்.பி.வேலுமணி கோரிக்கையையடுத்து முதல்வர் அறிவிப்பு!

Karthick