முக்கியச் செய்திகள் தமிழகம்

எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி தலைமையில், பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஸ்.அழகிரி, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.

நாங்கள் ஆராம்பத்தில் இருந்தே எழுவர் விடுதலையில் மதம், சாதி, இனம் என்ற எந்த பெயராலும் பாகுபாடு பார்க்ககூடாது என வலியுறுத்திவருகிறோம்” என்றார்.

Advertisement:

Related posts

வேளாண் சட்டத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு அரசு பொறுப்பேற்காது என கூற காரணம் என்ன? : சீமான் கேள்வி!

Saravana

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்: கமல்ஹாசன்

Vandhana

வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்; நேற்று விடுதலை!

Karthick