சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு
பங்குனி பிரமோர்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை
முன்னிட்டு விஸ்வக்சேனர் புறப்பாடு நடந்தது.
உபயதாரர் கோச்சாயி ஐயர், குமாரர் ரவிக்குமார் யாகசாலை மண்டபத்தில் ரெகுடாம பட்டர் ஸ்ரீ, பதி பட்டர் ஆகியோர் தலைமையில் யாகவே வேள்வி நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழா, கொடி மேளதாளத்துடன் நான்கு ரத வீதியும் பவனி வந்து கோயில் முன்பாக கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்று விழா நடந்தது.
இரவு அன்ன வாகனத்தில் சுவாமி வலம்வருதல் நடைபெறும். உபயதார் கன்னியப்பன் முதலியார் ,செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர்கள் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். வருகிற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திருக்கல்யாண விழா நடைபெறும்.
ஒவ்வொரு நாளும வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தினமும் மாலை சக்கரத்தாழ்வார் புறப்பாடும் நடைபெறும்.
—-ரெ.வீரம்மாதேவி
கொடியேற்றத்துடன் தொடங்கிய சோழவந்தான் பெருமாள் கோயில் திருவிழா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: