முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு: மேலும் ஒருவர் கைது!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா வீட்டில் இருந்த வைர நகைகள், பழங்கால தங்கத் நகைகள், நவரத்தினம் நகைகள் என சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்போட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைதாகியுள்ளார். மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர்நவாலி என்பவர் திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேனாம்ப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வினால்க் சங்கர் நவாலியிடம் 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவிடம் விசாரணை

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் எவ்வளவு நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் நேரில் விசாரணை செய்ய உள்ளனர். திருடப்பட்ட நகைகள் வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால்,
ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ அல்லது அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வீட்டுக்கு செல்லும்போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும் திட்டமிட்டுள்ளனர்.

போலீசில் புகார் அளித்தபோது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கியிருந்தார்.அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் ஒப்படைக்க திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார்

Halley Karthik

மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி: ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்

Web Editor

இளங்கலை படிப்புகளில் சேர் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Halley Karthik