தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் இடப்பட்டுள்ளது.  காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

மறுநாள் 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.