பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து விற்பனையானது.
சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் டீ விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூ.110.9 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை முதல்முறையாக 100 ஐக் கடந்து விற்பனையாகிறது.
தொடர்ந்து ஏற்றப்படும் விலையானது சாமானிய மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது வரியை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Advertisement: