முக்கியச் செய்திகள் விளையாட்டு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி

15வது ஐபிஎல்-ன் இன்றைய, 12-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

15-வது ஐபிஎல்-ன் 12-வது போட்டி மும்பையில் உள்ள பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களம்கண்டன.

இதற்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. அதில் 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது, அதில் 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதேபோல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதியது. அப்போது, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுக்கு 108 ரன்களை எடுத்தது, அதன்பின்னர் 17 ஓவர் முடிவில், 4 விக்கெட்டுக்கு 137 ரன்களை எடுத்தது. அப்போது, முதல் அரைசதத்தை பதிவு செய்தார் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், அதேபோன்று, தீபக் ஹீடாவும் அரைசதாம் அடித்தார்.

அண்மைச் செய்தி: ராம்பிரபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயத்தது. 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 9 விகெட்டுகளுக்கு 157 எடுத்தது. இதனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

Saravana

கொரோனா சுயபரிசோதனைக் கருவிகளை பயன்படுத்தக் கூடாது: அமைச்சர்

Halley Karthik

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Saravana Kumar