முக்கியச் செய்திகள் தமிழகம்

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்!

மதுரை விமான நிலையத்தில், ஓடுதள விரிவாக்கப்பணி மற்றும் புதிய கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில், 145 கோடி மதிப்பில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. எனினும், இங்கு கட்டமைப்புகள் இருந்தும் சர்வதேச விமானங்களை இயக்குவது தள்ளிப்போகிறது. இந்த நிலையில் 7,500 அடி நீளம் கொண்ட விமான ஓடுபாதையை, 10 ஆயிரம் அடியாக நீட்டிக்க தேசிய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி கட்டுப்பாட்டு கோபுரம், பழுது நீக்கல் மற்றும் பராமரிப்பு மையம் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகளை 97.44 கோடி ரூபாயில், 24 மாதங்களில் முடிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், புதிதாக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மூலம், 360 டிகிரி கோணத்தில், வானில் விமானங்களை கண்காணிக்க முடியும் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

Saravana

சசிகலா விடுதலையால் அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படாது: ஜி.கே.வாசன்

Saravana

மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: முதல்வர் மன்னிப்பு!

Gayathri Venkatesan