வங்கதேச சுற்றுப்பயணம்: இலங்கை கேப்டனாக குசால் பெரேரா நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக, குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல்…

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக, குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி, மே 23 ஆம் தேதி டாக்காவில் தொடங்கு கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளும் அதே மைதானத் திலேயே நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டிக்கான 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக குசால் பெரேராவும் துணை கேப்டனாக குசால் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: குசால் பெரேரா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (துணை கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, தனஞ்சய டி சில்வா, பதும் நிஸன்கா, தசுன் சனகாக, அஷேன் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதானா, அகிலா தனஞ்சயா, நிரோஷன் திக்வெல்ல, சமீர, ரமேஷ் மெண்டிஸ், அசிதா பெர்னான்டோ, லக்சான் சண்டகன், ஷமிகா கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.