கொரோனா ஊரடங்கு காரணமாக, உதகை ரோஜா பூங்காவில் நடைபெறவிருந்த கண்காட்சி, இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பாடு செய்யப்படும் மலர் கண்காட்சியை காண, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கோடை சீசன் தொடங்கியதை அடுத்து, ரோஜா பூங்காவில் ஏராளமான மலர் செடிகளை நட்டு, இந்த ஆண்டுக்கான கண்காட்சிக்கு தயார் செய்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், தற்போது பூங்கா முழுவதும் உள்ள செடிகளில், பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. எனினும், கடந்த ஆண்டை போலவே தற்போதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.