மதுரை | ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் நூதன திருட்டு – பெண் உட்பட இருவர் கைது!

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சத்தை சூசகமாக திருடியுள்ளனர். இதில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி…

Madurai | Two people, including a woman, arrested for stealing Rs. 2.8 lakh from a retired Air Force officer!

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சத்தை சூசகமாக திருடியுள்ளனர். இதில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (72) வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் காய்கறிகடை நடத்தி வருபவர் லட்சுமணன் 10 ஆண்டுகளாக கிருஷ்ணசாமிக்கு பழக்கம் என்பதால் வீட்டிற்கு தினமும் சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணசாமி கடந்த 12-ம் தேதியன்று வங்கிக்கு சென்ற பின் லட்சுமணனின் கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து பேக்கில் பர்ஸ், ஏடிஎம் கார்டை காணவில்லை என்று தேடியுள்ளார். பின்னர் கடந்த 15-ம் தேதி கிருஷ்ணசாமி செல்போனுக்கு நகைக்கடை பெயரில் ரூ.2.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் லெட்சுமணனை அழைத்து வங்கிக்கு சென்று விசாரித்து ஏடிஎம் கார்டை லாக் செய்துள்ளார்.

பின்னர் நகைக்கடைக்கு சென்று விசாரித்த போது ஒரு பெண் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 4 பவுன் நகை எடுத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் கடைசியாக லட்சுமணனின் கடையில் பையை வைத்தது ஞாபகம் வந்த நிலையில் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது லக்ஷ்மணன் மற்றும் நாகேஸ்வரி நாங்கள் உங்களது நகையை கண்டுபிடித்து தருகிறோம் என கூறி உள்ளார்கள். ஆனால் அவர் காவல் நிலையத்தில் தனக்கு தெரிந்த நபர் மூலமாக புகார் அளிக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இருவரும் கடந்த 17-ம் தேதி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு சென்று நாங்கள் தான் ஏடிஎம் மூலம் நகை வாங்கினோம் என்றும் போலீசிடம் கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் கூறியுள்ளார்கள். இவர்கள் மீது கிருஷ்ணசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.