my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!

my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  my V3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய்…

my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

my V3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் கிடைக்கும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கோவையைச் சேர்ந்த my v3 ads செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் இதன் உரிமையாளர் சக்தி ஆனந்தனை, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.இதன்படி, சக்தி ஆனந்தன், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த ஐந்தாம் தேதி 05.07.2024)சரணடைந்தார். இந்த வழக்கில் மீண்டும் ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (26.07.2024 )விசாரணைக்கு வந்தது. 69 லட்சம் மக்கள் இந்த செயலியால் பதிப்புக்கு உள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.