சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பே விடுதலைக் கனலை மூட்டியவர் அழகுமுத்துக்கோன் – மு.க. ஸ்டாலின் புகழாரம்…!

மாவீரர் அழகு முத்துக்கோன் சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பே விடுதலைக் கனலை மூட்டியவர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் பிறந்த நாள் இன்று ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு தரபினரும் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.

அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.