இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ட்ரெய்ன்’. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானுவின் ‘வி க்ரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன், நரேன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், டிம்பிள் ஹயாதி, யுகி சேது, கலையரசன், இரா.தயானந்த் மற்றும் ப்ரீத்தி கரண் ஆகியோர் நடித்துள்ளனர். ஃபௌசியா ஃபாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மிஷ்கின் இப்படத்தை இயக்கியதுடன் இசையமைத்தும் உள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு இப்படத்தின் படபிடிப்பு தொடங்கியது. பல்வேறு காரணங்களுக்காக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதற்கான காரணமாக தயாரிப்பாளர் கூறுகையில், “ட்ரெய்ன் திரைப்படம் ரயிலில் நிகழ் நேர்ததில் நடிபெரும் கதை, முழுவதுமாக ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் சவால் நிறைந்த CG பணிகள் உள்ளதே கால தாமதமானதற்கு காரணம்’ என கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ பாடல் வெளியாகியது. இந்த நிலையில் ரசிகர்களிடியே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள ட்ரெய்ன் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை நாளை வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தெரிவித்துள்ளார்.




