தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசவுள்ளார்.
சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை டெல்லி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவரை சந்திப்பார் என்று நேற்றே தகவல் வெளியானது.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது எழுவர் விடுதலை, நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







