முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பம்

அரசியல்வாதிகளை கண்காணிக்கும் ‘பெகசஸ்’ செயலி


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

தற்போதுள்ள ஜென் தலைமுறையில் இணையப் பயன்பாடும் ஸ்மார்ட் போன் பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் சிறியவர் பெரியவர் என்ற பாரபட்சம் இல்லை. டிஜிட்டல் தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அது ஒருபுறம் தனக்கான ஆபத்தையும் சந்தித்து வருகிறது. அப்படியாக தற்போது இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரது தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும் கண்காணிக்கவும் பெகசஸ் ஸ்பைவேர் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

அம்னேஸ்டி இன்டர்நேஷனலுடன் தி வயர் மற்றும் இதர பத்திரிகைகள் இணைந்து நடத்திய ஃபார்பிடன் ஸ்டோரிஸ் எனும் ஃபாரன்சிக் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது இந்த பெகசஸ் ஸ்பைவேர் செயலி. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனம், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரது தொலைப்பேசியையும் ஒட்டுக் கேட்பதற்காக இச்செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆய்வு தொடங்கியது 2016இல். இது குறித்து அம்னஸ்டி கூறுகையில்
,2016 ஆகஸ்ட் மாதம், ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அகமது மன்சூர் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் குறிவைக்கப்பட்டதாகவும், அவர் தன் ஐபோன்க்கு வந்த ஒரு லிங்கை தங்களுக்கு அனுப்பி அதை கிளிக் செய்தபோது அது அவர்களுக்கு பெகசஸை அறிமுகம் செய்தது என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த செயலியை ஆராய்ந்த போது அதற்கு உலகம் முழுவதும் 237 சர்வர்கள் உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் “கேன்ஜஸ்” எனும் ஆப்பரேட்டர் மூலம் அரசியல் ரீதியான கண்காணிப்புக்கு இச்செயலில் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்த ஃபாரன்சிக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு ஸ்மார்ட் போனை கண்காணிக்க முதலில் அந்த போனில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டர் பாதுகாப்பு விதிமுறைகளைத் தாண்டி அந்த போனுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போன் பயனாளர் வேறு ஒரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாளும் பின்னணியில் தன்னையறியாமலே தனது ஸ்மார்ட் போனில் பெகசஸ் ஸ்பைவேர் செயலியை பதிவேற்றம் செய்ய அது வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செயலி பதிவேற்றமான பிறகு பயனாளரின் அனுமதியின்றி அந்த போனில் உள்ள பயனாளரின் சோசியல் மீடியா உட்பட அனைத்து பாஸ்வேர்ட்கள், வங்கி தகவல்கள், கேலண்டர் நிகழ்வுகள், அனைத்து வகை வாய்ஸ் கால் மற்றும் மெசேஜ்கள் என அனைத்தையும் கண்காணித்து தரவிறக்கம் செய்து அச்செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள சர்வர்களுக்கு அது அனுப்பிவிடுகிறது. மேலும், பெகசஸ் செயலியானது, தொலைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் இயக்கும் வல்லமை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த செயலியின் இலக்கு சாமானியர்களைக் காட்டிலும் உலக அரசியல் தலைவர்கள் பத்திரிக்கையாளர் போன்றோர் என்பதே அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளின் தொலைப்பேசிகள் இச்செயலியின் மூலம் கண்காணிக்கப் பட்டுள்ளதாக அம்னேஸ்டியின் “ப்ராஜெக்ட் பெகசஸ்” என்னும் ஃபாரன்சிக் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து என்எஸ்ஓ நிறுவனம், தாங்கள் ஸ்பைவேர் செயலியை மட்டுமே உருவாக்கியதாகவும், அந்த செயலியைக் கொண்டு யார் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது அதைப் எங்களிடமிருந்து வாங்கியவர்களின் மீதான பொறுப்பே அன்றி, தங்களுக்கும் கண்காணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது அப்டேட்கள் மூலம் இதுபோன்ற செயலிகள் தரவிறக்கம் செய்வதை முற்றிலுமாக தடுத்துள்ளதாகக் கூறுகிறது. ஆண்ட்ராய்டு OSகளிலும் இதுபோன்ற கண்காணிப்பு ஸ்பைவேர்கள் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அரசு முகமைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் செந்தில்பாலாஜி

Saravana Kumar

பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்!

Halley Karthik

டாஸ்மாக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம்!

Gayathri Venkatesan