முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மின்சார சட்ட திருத்தம், சிறு துறைமுகங்கள் திருத்த மசோதா, அணைகள் பாதுகாப்பு, உள்ளிட்ட 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரக் ஓ பிரையன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆரோக்கியமான மற்றும் பலனளிக்கும் விவாதங்கள் நடத்த தயார் என பிரதமர் மோடி இக்கூட்டத்தில் தெரிவித்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

Janani

தபால் பையில் தமிழ் – அஞ்சலக அதிகாரிக்கு எம்பி வாழ்த்து!

Web Editor

புதுச்சேரி தலைமைச்செயலகத்தின் மாதிரி படம் வெளியீடு

Vandhana