போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல், காதலனை தேடி சேலம் வந்த காதலியை கரம் பிடித்த வாலிபர் : ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பாபு அவர்களது மகன் கார்த்திக் . இவர் எம்எஸ்சி படித்துவிட்டு ஓமலூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றாலும் அரசு வேலைக்காக பல தேர்வுகளை எழுதி வருகிறார் . இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு ஈரோட்டுக்கு தேர்வு எழுத சென்ற பொழுது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் மகள் கவிப்பிரியா என்ற மாணவியும் தேர்வு எழுத வந்துள்ளார்.அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் இரண்டு ஆண்டுகளாக பேஸ்புக் ட்விட்டர் மற்றும் வாட்சப் ஆகியவைகளில் தொடர்பு கொண்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கவிப்பிரியாவின் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என தெரிந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து காதலனை தேடி சேலம் வந்தார் .சேலம் வந்தடைந்த காதலியை அழைத்துச் சென்று காதலன் கார்த்திக் காடையாம்பட்டி அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் திருமணம் செய்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிறகு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர் . ஓமலூர் போலீசார் இரு வீட்டார் பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்தனர் . அப்போது கவிப்பிரியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. மேலும் தொடர்ந்து எங்களுக்கும் எங்க பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பெற்றோர்கள் எழுதி கொடுத்து விட்டு சென்றனர். இதை தொடர்ந்து காதலியை போலீசார் பத்திரமாக காதலனுடன் அனுப்பி வைத்தனர்.