ஆசிய கோப்பை கிரிக்கெட்: காயத்தால் ஜடேஜா விலகல்; இளம் வீரருக்கு வாய்ப்பு

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம்…

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றன.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதையடுத்து, ஹாங் காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், வலது கால் மூட்டில் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஜடேஜா 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

அக்சர் படேல்

இவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திலும் காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது.
அக்சர் படேல், ஜடேஜாவைப் போன்றே இடது கை ஆட்டக்காரரும், இடது கை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.