திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவா் பலி!

திருவள்ளூர், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சுரேஷ் (44) தனது மனைவி மகனுடன்…

திருவள்ளூர், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சுரேஷ் (44) தனது மனைவி மகனுடன் திருத்தணி அருகே உள்ள தனது சொந்த ஊரான தரணிவராகபுரம் பகுதியில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்று பின் ஒரே இருசக்கர
வாகனத்தில் ஆவடி நோக்கி வந்தபோது திருவள்ளூர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மண் லாரியும் கொரியர் வாகனமும் மோதிக்கொண்டதில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில்  சுரேஷ்  படுகாயமடைந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தாா்.

இதனையடுத்து அவருடைய மனைவி சுதா( 34) அவருடைய மகன் மனோஜ் (15) கவலைக்கிடமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

—-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.