29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நீண்ட கால முதலமைச்சர் பட்டியல் : ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் 2மிடம்! கருணாநிதி, ஜெயலலிதா எத்தனாவது தெரியுமா?

இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சர் பதவி வகித்தவா்களின் பட்டியலில் ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் என்றால் அது அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தான். அப்படிப்பட்டவர்களில் யார் ஒருவர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைத்து சிறப்பானதொரு ஆட்சியை தருகிறார்களோ அவர்களே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று அசைக்க முடியாத தலைவர்களாக ஜொலிப்பர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி இப்போது நீண்ட காலம் முதலமைச்சர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் ஒடிசா முதலமைச்சரான நவீன் பட்நாயக் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். தொடா்ச்சியாக ஐந்து தோ்தல்களில் வெற்றி பெற்று 5 முறை முதலமைச்சரான பட்நாயக் 2000ஆவது ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி முதல் முறையாக ஒடிசா முதலமைச்சராகி, 23 ஆண்டுகள் 139 நாட்களாக அப்பதவியில் இருக்கிறார்.

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சராக இருந்த சிபிஎம் காட்சியைச் சேர்ந்த ஜோதி பாசு இத்தனை காலம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், இவரை நவீன் பட்நாயக் நேற்றைய தினம் ஓவர்டேக் செய்தார்.ஜோதிபாசு 1977, ஜூன் 21 முதல் 2000, நவம்பா் 5 வரையில் 23 ஆண்டுகள் 138 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார்.

இந்த பட்டியலில் சிக்கிம் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங் நாட்டிலேயே அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். கடந்த டிசம்பர் 12, 1994இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், மே 27, 2019 வரை, அதாவது 24 ஆண்டுகள் 166 நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

தொடா்ந்து 5 தோ்தல்களில் வெற்றி பெற்ற முதலமைச்சர்களின் பட்டியலில் பவன் குமாா் சாம்லிங், ஜோதி பாசு ஆகிய இருவரையும் தொடா்ந்து நவீன் பட்நாயக் மூன்றாவது தலைவராக இடம்பெற்றுள்ளாா். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடைபெற உள்ள ஒடிஸா பேரவைத் தோ்தலில் நவீன் பட்நாயக் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டின் நீண்ட கால முதலமைச்சராக வரலாற்றில் இடம்பிடிப்பாா்.

இதுகுறித்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவா் பிரசன்னா ஆச்சாா்யா கூறுகையில், ‘நீண்ட கால முதலமைச்சர் பட்டியலில் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் அனைத்து வரலாற்றையும் கடந்து நீண்ட கால முதல்வா் என்ற பெருமையை நவீன் பட்நாயக் நிச்சயம் பெறுவாா்’ என்றாா்.

இந்தப் பட்டியலில் அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கெகாங் அபாங் மொத்தம் 22 ஆண்டுகள் 250 நாட்கள் என முதலமைச்சராக பதவி வகித்து 4ஆவது இடத்திலும், அடுத்து மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் லால் தன்ஹாவ்லா மொத்தம் 22 ஆண்டுகள் 60 நாட்கள் முதலமைச்சராக இருந்து 5வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இமாச்சலப் பிரதேசத்தின் வீரபத்ர சிங் 21 ஆண்டுகள் 13 நாட்களும், திரிபுராவின் மாணிக் சர்க்கார் 19 ஆண்டுகள் 363 நாட்களும் முதலமைச்சர்களாக இருந்து 6 மற்றும் 7ஆவது இடத்தில் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 3 முதலமைச்சர்கள் டாப் 50இல் உள்ளனர். இதில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மொத்தம் 18 ஆண்டுகள் 362 நாட்கள் என 8ஆவது இடத்திலும், மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மொத்தமாக 14 ஆண்டுகள் 127 நாட்கள் என 24ஆவது இடத்திலும் உள்ளனர். அதேபோல அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மொத்தம் 10 ஆண்டுகள் 65 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்து இதில் 43ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading