மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!

மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற…

மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
திரிணமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன.

இதையும் படியுங்கள் : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’ – திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய கூட்டணிக் குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்துள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த குழுவில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஸ் பாகெல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.