ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!
இதே ஏலத்தில் தான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் அணியால் ரூ.20.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் அதனை முறியடித்து, கொல்கத்தா அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.







