மக்களவை தேர்தல் 2024 | பரப்புரையை தொடங்கினார் இபிஎஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை முடித்துவிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அதிமுக தமிழகத்தில் 33 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை இன்று சேலம் சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் தொடங்கினார். சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து வாக்கு சேகரித்துவருகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.