கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திராவில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் 2 வது அலை நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் தொற்று பாதிக்கப்பட்டோர்களால் நிரம்ப் வழிகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப் படுகிறது. இந்நிலையில் அங்கு தினசரி பாதிப்பு 24,171 ஆக அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து வரும் 31- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.







