நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புபனுக்கள் பரிசீலனை நேற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாலர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய உரிய இடங்கள், எவையெல்லாம் இந்த நகர்ப்புற உள்ளாட்சியில் பின்பற்றி நடக்கவேண்டும் எனவும் மாநிலத் தேர்தல் ஆனையம் அறிவித்து வருகிறது. இந்நிலையில், மற்றொரு வழிக்காட்டு நெறிமுறையாக மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதால் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக்ககடைகளும், மதுக்கூடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22ம் தேதியும் மதுக் கூடங்கள், மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி முறைக்கேடாக மதுபானங்களை விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








