கந்துவட்டி கொடுமையால், காட்டுமன்னார்கோயில் பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த உருத்திரசோலை கிராமத்தில் ராதாகிருஷ்ணன் மகன் கவி என்கின்ற கவியரசன்(33) வசிக்கிறார். முடிதிருத்தும் தொழிலாளியான இவர் ஸ்ரீநிதி(26)
என்ற மனைவி மற்றும் சிவனேஷ் 4 மாத ஆண் குழந்தையுடன் ஜம்ஜம்நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிறுப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சிதம்பரம் மெயின்ரோடு மேட்டுதைக்கால் பகுதியில் தனியாக முடிதிருத்தும் கடை நடத்தி வந்ததுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சசி என்பவரிடம் கந்து வட்டிக்கு 10 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கி நண்பர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் திருப்பி தராததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். பணம் கொடுத்ததை அவர் குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் சசி மற்றும் அவரது மனைவி கவியரசு மனைவி ஸ்ரீநிதிக்கு போன் செய்து வருகின்ற 15ஆம் தேதி பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கவியரசன் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மிகுந்த மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் நண்பர்கள் கவியரசனுக்கு போன் செய்துள்ளனர். நீண்டநேரம் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் கடைக்கு நேரடியாக வந்து பூட்டப்படாத கடை ஷெட்டரை திறந்து பார்த்தபோது, அங்கு கவியரசன் அவரது கடையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் அவர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவியரசனின் செல்போனை கைப்பற்றி சடலத்தை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கந்துவட்டி கொடுமையால் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.