லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: 3 மாணவர்கள் பலி!

லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கூத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா மகன் ரிஷ்வான் (17), …

லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கூத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த முகமது
அப்துல்லா மகன் ரிஷ்வான் (17),  திருவாரூர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து
வந்தார். அப்துல் முகமது மகன் பாசித் (17) , கீழ்வேளூரில் ITI படித்து
வந்தார். கூத்தூர் புதுத்தெருவை சேர்ந்த பாவா பக்ரூதின் மகன் நவ்புல் (17),
திருவாரூரில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

உறவினர்களான இவர்கள் மூன்று பேரும் பைக்கில் கீழ்வேளூர் சென்று விட்டு கூத்தூரில் உள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.  அப்போது குருக்கத்தி பெட்ரோல் பங்கு அருகே சென்ற போது எதிரே வந்த லோடு வேன்,  பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் சென்ற ரிஷ்வான்,  பாசித்,  நவ்புல் ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.  உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதில்  பாசித், ரிஷ்வான் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவபுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் சக்திவேலை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.